Thursday 10 January 2013

நடைமுறை வாழ்க்கையில் நடைபயிற்சி



நடைமுறை வாழ்க்கையில் நடைபயிற்சி


வெளியிடம் செல்கையில் ...

லிஃப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை உபயோகிப்பது.

பேருந்திலிருந்து வழக்கமான இறங்கும் இடத்திற்கு முன்பாகவே இறங்கி நடந்து செல்வது.

அலுவலகங்களில் ...

இருந்த இருக்கையிலேயே தொலைபேசியில் தொடர்ந்து பேசுவதை தவிர்த்து அவ்வப்போது நின்ற நிலையில் பேச்சை தொடரலாம்.
சக பணியாளர்களை, மதிய உணவிற்கு பின்பு மேற்கொள்ளும் சிறிய உடற்பயிற்சி முறைகளில் கூட்டு சேர்த்து கொள்ளலாம்.

வீட்டில் உள்ள படியே ...

தொலைக் காட்சியில் விளம்பர இடைவேளைகளின் போது கை கால்களை நீட்டியோ உட்கார்ந்து எழுந்தோ தசைகளை தளர்வடையச் செய்யலாம்.
பணி முடிந்த பிறகு குழந்தைகளுடன் மைதானத்தில் விளையாடலாம்

இரவு உணவிற்கு பிறகு தொலை காட்சி பார்ப்பதை தவிர்த்து விட்டு சற்றேனும் குடும்பத்தினருடன் நடை பழகலாம்.

- உடற்பயிற்சியை நாம் ஜும்முக்கு சென்று தான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. நாம் அன்றாடம் செய்யும் செயல்களிலேயே உடற்பயிற்சி அடங்கியுள்ளது. மேலே உள்ள நடைமுறைகளை நாம் தொடர்ந்து கடைபிடித்தாலே உடல் எடையையும், ஆரோக்கியத்தையும் சீராக வைத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment