Friday, 11 January 2013

நாமக்கல் ஊர் பெருமைகள்



நாமக்கல்,இன்று அறிந்துக்கொள்ளும் ஊர். முன்பு நாமகிரி என்றழைக்கப்பட்டது. நாமகிரி என்பது இங்குள்ள ஒற்றைக்கல் மலையை குறிப்பதாகும். பின்னாளில் ஒற்றைக்கல் மலை நாமக்கல் என்றழைக்கப்பட்டது.
இது ஒரு நகராட்சியாகும். இது குப்பை இல்லா நகரம் என்னும் சிறப்பையும் பெற்றதாகும.
இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது,
இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.. அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நாமக்கல் மலையின் மேற்கு புறம் உள்ளது. நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஓரு குடைவரை கோயில் , இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது.
மலையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

ஒரே தொழில் காலம்காலமா செய்து அழியாமல் புதியாக யோசித்து இயற்கையிலும் செயற்கையிலும் வென்று காட்டியவர்கள் இவ்வூர் மக்கள்.18000
க்கும் அதிகமான கனரக வாகனங்கள் இங்கு உள்ளன. கனரக வாகனங்கள் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. கனரக வாகனங்கள் தொடர்பான தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு கனரக வாகனங்கள் உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.

1500
க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.1000 கோடிக்கு மேல் வருவாய் பெற்ற கோழிப்பண்ணைகள் நிறைய உள்ளன.
கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் 2 இடத்தில் உள்ளது. முதலில் நாடு முழுக்க கோழிகளையும் முட்டைகளையும் குறைவான விலைக்கு விற்றவர்கள், தற்போது சிங்கப்பூர்,அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் நாட்டில் கோழி முட்டை விலை பலமடங்கு உயர்த்தினர்.
கோழியின் கழிவுகளிலிருந்து மீனுக்கு தீவனம் தயாரிக்கின்றனர்.

சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன,
சோளம் கிழங்கு போன்ற தீவனப்பயிர்கள் விவசாயம் செய்கின்றனர்.

No comments:

Post a Comment