Friday 11 January 2013

அரியவகை நெல் வகைகள்



சில மாதங்களாக நாடெங்கிலும் விவசாயிகள்,தொண்டுநிறுவனங்கள்,சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் மரபீனி மாற்ற கத்திரிக்காய்க்கு மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக தற்காலிக தடையை விதித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டங்களை நாட்டின் முக்கிய சில நகரங்களில் வைத்து மக்கள் கருத்தறிந்த பின்பே இருதிமுடிவேடுக்கப்படும் என சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்தார். இதற்கு முன் மான்சாண்டோ,மகிக்கோ போன்ற அமெரிக்கா நிறுவனங்களின் சோதனை முயற்சியாக இந்தியாவிற்குள் நெல்,பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் மீது பொய்யான கவர்ச்சி மிகுந்த காரணங்களான பூசிவிழாது,அதிக மகசூல் என சொல்லி விதைகளை அதிக விலைக்கு விற்றதன் காரணமாக வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கடனாளியாகி ஆந்திராவில் மட்டும் 7000 க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

நமது பாரம்பரிய விவசாயமுறையில் விவசாயிகள் ஏராளமான வகைகளை உற்பத்திசெயதனர் அதில் இயற்கையான முறையில் ஊட்டசத்துக்களும் ,விதவிதமான சுவையும்,வெவ்வேறுவிதமான பருமனும் , பூச்சிகளை எதிர்க்கும் திறனும் கொண்டவைகளாக இருந்து வந்தன . இவைகள் ஒன்றும் ஆராச்சிகல்வி முடித்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவைகள் அல்ல அனுபவம் மட்டுமே உள்ள விவசாயிகள் கண்டுபிடித்தவைகள் அவைகளின் விவரங்கள் இங்கே.

பாரம்பரிய நெல்விதைகளின் வகைகள் :
சம்பா நெல் வகைகள்:
கஸ்தூரி சம்பா,நெல் சம்பா,குணா சம்பா,சீராக சம்பா,குண்டுமணி சம்பா,கொத்தமல்லி சம்பா,தூய மல்லி சம்பா,கீர சம்பா,கல்லன் சம்பா,செறிய சம்பா .
இந்த வகை நெல் 4 மாதம் முதல் 6 மாதம் வரை ஆகும்.


குறுவா நெல்வகைகள் :
கட்டு குறுவா,டார்ப்ப குறுவா ,மிக் குறுவா,கரி குறுவா,குல குறுவா,பணம் குறுவா,அறுவாள் குறுவா.
இந்த வகை நெல் 2 மாதம் முதல் 4 மாதங்களில் விளைந்துவிடும்.

சொர்ணவாரி,காடகழுத்தான்,விலங்கன்,மானாவாரி,மருதவேளி,கரிமுலாக்கி,ஜீரகமுலாக்கி,எவன்ன முலாக்கி,மஞ்சமுலாக்கி,.
இந்த வகை நெல் வகைகள் மூன்றரை மாதத்தில் விளைவதாகும்.
காற்றாடி முத்தன்,காற்று காரிமைணன், விரியன் , கல்லுண்டான்,கருத்த அரிவிக்குருவி,சிறலாகி,சுட்டிவிரியான்,கருத்த செறு கண்டான் ,குற்றாலம்,குன்தாவேலா,குன்னியப்பன்,கொடா நரியன்,கட்டி வெல்லா,பூதல கறுப்பன்,முண்டாக்க(சிகப்பு)சொன்னால்,முண்டாக்க பள்ளிபுறா(கருப்பு
),
கியூவாலா,மஞ்ச வள்ளி,வெற்றிகண்டான்,(பெரியது),சின்குனி,குருவகல்லான்,சிமநெல்,அதிக்கிரவி வெள்ளா,செண்பகா மார்த்தாண்டன் கருத்த தட்டார வெல்லா , பலன்த தட்டார வெல்லா ,ஆனா கொம்பன்,குட்டி ஆனா கொம்பன்,செம்புள்ளி,முத்து வெல்லா,கும்பாலாவால் கிளை முண்டான்,(வெள்ளை),பாலி சொறிம்பு(கறுப்பு),பாலி சொறிவு(வெள்ளை),வெள்ளை செறு நெல்,விரியாதுங்கன்,புல்லு புளத்தி,கறுப்பு காணி,செம்பாக லிங்கம்,வாலி கறுப்பான்,சித்ரகாணி.
இவற்றில் இன்று 90 சதம் அழிந்து போனது வருத்தமானது மல்ல மிகப்பெரிய இழப்பு மாகும் .

No comments:

Post a Comment