Monday 21 January 2013

காலில் நாம் வீழ்ந்துவணங்குவது ஏன்?


பெரியவர்கள், வயதில் மூத்தவர்கள், ஆன்மிகச் சான்றோர்கள், இவர்கள் காலில் நாம் வீழ்ந்துவணங்குவது ஏன்?

வெறும் மரியாதை நிமித்தமா?
இல்லை...

ஒவ்வொரு மானிடர் உடலிலும் ஒரு காந்தப்புலம் (Magnetic Field) உண்டு! அவரவர் பெற்றிருக்கும் ஆன்மிக வலிமையின் அடிப்படையில் அது வேறுபடும்.

இது, அருகிலுள்ள உலோகங்களைப பாதிக்கும் அளவு, அவ்வளவு வலிமையானதல்ல என்று, இன்றைய அறிவியல் மறுத்தாலும், அத்தகைய காந்தப்புலம் இருக்கின்றது என்பதை, அது முற்றாக மறுதலிக்கவில்லை.

http://www.biology-online.org/biology-forum/about1283.html
http://www.youtube.com/watch?v=CiLoxyn7D6g


இக்காந்தப்புலத்தைப் புரிந்துகொள்வதற்கு, தலையை "வடமுனைவு"(north pole) ஆகவும், கால்களை "தென்முனைவு"(south pole) எனவும் கொள்வோம்.

இனி வருவது, இயல்பியல் படித்தோருக்கு இலகுவாக புரியும். வடமுனைவிலிருந்து தென்முனைவுக்கு, காந்தவிசைக்கோடுகள் சென்றுகொண்டிருக்கும்.

வடமுனைவுக்கருகே வடமுனைவைக் கொண்டுசெல்லும் போது, இவ்விசைக்கோடுகள், ஒன்றையொன்று எதிர்ப்பதால், அவை இரண்டும் ஒன்றையொன்று தள்ளுகின்றன.

ஆனால், வடமுனைவுக்கருகே தென்முனைவைக் கொண்டுசெல்லும்போது, அவை ஒன்றை ஒன்று ஈர்ப்பதால், அவை கவரப்படுகின்றன.

காந்தத்துண்டுகளை வைத்துக்கொண்டு, சிறுவயதில், இவ்வாறு விளையாடிய அனுபவம் உங்களுக்கு இருக்கலாம்.

இனித்தான் வருகிறது, மெய்ஞ்ஞானத்தின் விஞ்ஞானம்! பெரியவர்களின் காந்தப்புலம், அவர்களின் தலையிலிருந்து, காலுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. ஆசீர்வாதம் வாங்கும்போது, அவர் கால்களில் நம் தலை படுகிறது. தலை - கால், இரண்டும் எதிரெதிர் முனைவுகள். ஒன்றையொன்று கவரும்!

இந்நிலையில், அச்சான்றோர் கொண்டிருக்கும் ஆன்மிகசக்தி, அவர்கள் கால்களூடாக, நம் தலையிற் பரவி, நம் உடலை அடைகிறது. இதுதான், காலில் வீழ்ந்து ஆசி பெறுவதன் உண்மையான காரணம்!

மூத்தவர்களை தெரியாமல் மிதித்துவிட்டால், அவர்களைத் தொட்டுவணங்கி, "சிவசிவ" என்று கூறும் வழக்கம் சிலரிடம் இருக்கிறது. ஏனென்று தெரியுமா??

இங்கும் அதே அறிவியல்தான். அவர்களின் கால்களை, நம் கால்கள் மிதிக்கும்போது, இரண்டும் ஒத்தமுனைவுகள்! ஒன்றையொன்று தள்ளும்! இதனால், அப்பெரியவர்களின் எதிர்மறை எண்ணங்கள் நம்மை அடைந்துவிடக்கூடும் என்ற காரணத்தாலேயே, அவரைத் தொட்டுவணங்குகிறோம்.

இந்தக் காரணங்கள் நாம் மட்டுமல்ல... மேலைத்தேய விஞ்ஞானமும் கூறும் உண்மை!

இக்காந்தப்புலங்களை, மனித உடலைச் சுற்றியுள்ள "ஆரா" (Aura) என்னும் வண்ணஒளிவட்டங்களாகக் காணும் மேலைத்தேய ஆய்வுகள், மனித எண்ணங்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள், "ஆரா" வட்டத்தைப் பாதிக்கும் என்று நிரூபித்துள்ளன. ஒரு தனிமனிதனின் ஆரா வட்டம், அவனது உடலியல், தொழிற்பாட்டியல் வன்மையைப் பொறுத்து, அருகிலுள்ளவர்களையும் பாதிக்கும் திறன் கொண்டதாம்!
http://voices.yahoo.com/how-aura-too-acid-affect-yourself-3463861.html
http://www.heartscenter.org/Teachings/WisdomTeachings/UnderstandingtheHumanAura/tabid/368/Default.aspx
http://peaceandloveism.com/wiki/index.php?title=Aura#Effects_on_others

விசேட வகை புகைப்படக்கருவி மூலம், இவ்வாரா வட்டங்களைப் படமெடுத்தும் உள்ளனர். (இந்த ஆராவட்டங்களைத் தான், எத்தனையோ வருடங்களுக்கு முன்னர், நம் முன்னோர்கள், தெய்வங்களின் சிரசைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டங்களாக சித்தரித்துவிட்டனர் என்பது எவ்வளவு ஆச்சரியத்துக்கும் பெருமைக்குமுரிய விடயம்?)

இவ்வாரா வட்டம் பற்றிய மேலதிக ஆய்வுகள், இன்று, நிறமருத்துவம் (Colour therapy or Chromotherapy) எனும் மருத்துவத்துறையாகத் தனியே வளருமளவுக்கு, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிற மருத்துவத்தில், நமது யோகாசனங்களில் கூறப்படும் 7 சக்கரங்கள் பற்றியும் ஆய்வு செய்துவருகின்றனராம்!

http://en.wikipedia.org/wiki/Colour_therapy
http://www.lightandcolour.net/colour/how.html

இப்போது சொல்லுங்கள்.... ஆன்மிகமும் அறிவியலும், ஒன்றுடனொன்று தொடர்புள்ளவையா? இல்லை, சிலர் சொல்லித்திரிவது போல், ஒன்றுக்கொன்று எதிரானவையா?

உபரித் தகவல்:
ஆலயங்களுக்குச் செல்லும்போது, அங்கு சிவாச்சாரியார், பூசாரி, நாம் காணும் பெரியவர்கள் முதலானோரின் காலில் விழுந்து வணங்கும் வழக்கம் சிலரிடம் இருக்கிறது. இது தவிர்க்கப்படவேண்டும்! ஆலயத்தில், ஆண்டவன் ஒருவனே பெரியவன்! அங்கே வேறொருவருக்கு நாம் முதனிலை வழங்கலாகாது!

No comments:

Post a Comment