Monday, 15 April 2013

"வேதனை தரும் வெள்ளை சீனி"


உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப...் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Tuesday, 5 March 2013

தமிழில் விண்டோஸ் 7 !!


கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.

இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.

அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் இந்த இணைப்பில் (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta) சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.

உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.

இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்,

சி.டி.களில் கிறுக்கல் விழுந்து விட்டதா? தகவல்களை எப்படி பெறுவது இதோ ஒரு எளிய முறை!



இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும்.
வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும். இதற்கு தீர்வு நமது போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு பக்கத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.

*எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.
*நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை (Software) பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.
நண்பர்களே தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம்.. படிக்கவும்.. நண்பர்களுக்கு பகிரவும்..

Tuesday, 12 February 2013

நாம் குடிக்கும் பாலின் மகத்துவம்..!




பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது! பால், பசுவின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

பால்இயல்பாகவே இனிப்பானது, குளிர்ச்சி தருவது. அதே சமயம், அது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. ஆனால், குடித்தவுடனே புத்துணர்வு தரத்தக்கது. உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது. சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்து!

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.


ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ள வர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!

கழுதைப்பால் ரொம்ப சூடு. லேசாகப் புளிப்பும் உவர்ப்பும் கலந்த சுவைகொண்டது. வாதத் தொந்தரவுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான் இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை, கழுதைப் பால் அருந்துவதுதான்!

***

சரி... பாலை எப்படிச் சாப்பிடுவது?

பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும்.

அதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து, சளித் தொந்தரவு வரும். எனவே, அதன்பின் கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது!

காலையில் வெறும் வயிற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக எடுத்த பிறகுதான் டிபன் சாப்பிடவேண்டும். இருமலோ, தொண்டையில் கிச்...கிச் தொந்தரவோ உள்ளவர்கள், பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடலாம்.


பால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப் பிட்டபிறகு, உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்!

பாலில் ரெடிமேட் சத்து பவுடர்களைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகமாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டம் தர, இந்தச் சத்துபானங்கள் அவசியம்என நினைக்கிறார்கள் பலர்.

பாலில் இந்த பவுடர்கள் சேர்த்தபிறகு, அதன் கடினத்தன்மை மேலும் அதிகரிப்பதால் அது செரிமானம் ஆகக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, அதற்கேற்றாற் போல, மற்ற சாப்பாடு அயிட்டங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

காலை டிபன் கூடவோ, இரவு டிபன்கூடவோ இந்தப் பானத்தைத் தருவதைத் தவிர்க்கவேண்டும். அதிகாலை அல்லது மாலை என உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரங்களில்தான் குடிக்கத்தரவேண்டும்.


'வெளுத்ததெல்லாம் பாலுனு நம்பிடுவேன்' என அப்பாவிகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இப்போது வெளுப்பாக வரும் எதையுமே பால் என்று நம்பிவிடக்கூடாது.


முன்பெல்லாம் 'பால் சாப்பிட்டால் செரிக்காது' என்ற ஒரே பிரச்னை மட்டும் தான் இருந்தது. இப்போது 'பால் அலர்ஜி' என்ற புதுப் பிரச்னையும் சேர்ந்துகொண்டு விட்டது!

பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கிறார்கள். பாலைத் தரும் பசுவைப் புனிதமாக கருதுவது இந்திய கலாசாரம்.

சரி... தயிர், வெண்ணெய், நெய் பற்றி... பால்காரர் எடுத்து வருவதும், பாக்கெட் பாலும்தான் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கின்றன. அது பசும்பாலா, எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா... எதுவுமே தெரியாது!

பலர் இந்தப் பாலை வெறுமனே பொங்கும்வரை கொதிக்க வைத்தால்போதும் என நினைத்து, பொங்கி நுரை கிளம்பி வந்ததுமே அடுப்பில் இருந்து இறக்கிவிடுகிறார்கள்.

இது தவறு! பால் கொதித்தால் மட்டும் போதாது... ஒரு பங்கு பாலுக்கு நான்கு பங்கு தண்ணீர் ஊற்றிப் பாலைக் காய்ச்ச வேண்டும். 'அதுதான் ஏற்கெனவே பால்காரரே தண்ணீரைக் கலந்துவிடுகிறாரே' என ஆதங்கப்படுகிறவர்கள் வேண்டுமானால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் சுத்தமாகச் சுண்டி, பழைய ஒரு பங்கு அளவு ஆகும்வரை கொதிக்கவிட வேண்டும். (ஆனால், இன்றைய அவசரயுகத்தில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்கிறீர்களா? இதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம்!) கொதித்ததும் ஸ்டவ்வை நிறுத்திவிடக்கூடாது.

ஐந்து முதல் பத்து நிமிடங்கள் லேசான சூட்டில் அப்படியே வைத்திருந்து, அதன்பிறகே ஸ்டவ்விலிருந்து பாலை எடுக்க வேண்டும். ஆனால், அதற்காகப் பாலை எந்நேரமும் அடுப்பிலேயே கொதிக்கவைப்பதும் தவறு.

டீக்கடைகளில் எப்போதும் அடுப்புச் சூட்டிலேயே இருக்கும் பால் வயிற்றுக்கு ஏகப்பட்ட உபாதைகள் தரும்.

மேலு‌ம் ‌சில த‌னியா‌ர் பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ள், பா‌லி‌‌ல் ப‌ல்வேறு ரசாயன‌ங்களையு‌ம் கல‌ந்து ‌வி‌ற்பனை செ‌ய்‌கி‌ன்றன. எனவே, ந‌ல்ல தரமான பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் பொரு‌ட்களை ம‌ட்டு‌ம் வா‌ங்குவது உடலு‌க்கு ந‌ல்லது.